வலிமை, ஆர்.ஆர்.ஆர் இரண்டு படங்களும் 2022'ற்கு நல்ல துவக்கம் தரும் - சிவகார்த்திகேயன்

வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்கள் இரண்டும் 2022'ம் ஆண்டு நல்ல துவக்கத்தை திரையுலகிற்கு தரும் என ஆர்.ஆர்.ஆர் படவிழாவில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் பான் இந்தியா படமாக வரும் ஜனவரி 7'ம் தேதி 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் அறிமுகவிழா நேற்று சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.
அதில் பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது, "இந்த படத்தை முதல்நாள் முதல் ஷோ பார்க்க ஆவலாக உள்ளேன். இப்படத்தை ஒரு மொழி படம் என எண்ண கூடாது மொத்த குழுவாக இப்படத்தை இந்தியப்படமாக கொண்டு வந்துள்ளனர். இதனை நம் தேசிய படமாக பார்க்க வேண்டும். நாம் எத்தனை நாள் தான் ஹாலிவுட் படங்களை உதாரணமாக காட்டி பேசுவது, இனி நம் இந்திய படத்தையும் உதாரணம் காட்டலாம். வரும் 2022'ம் ஆண்டில் அஜித்குமாரின் வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர் படம் திரையுலகிற்கு நல்ல துவக்கத்தை கண்டிப்பாக தரும்" என பேசினார்.