Kathir News
Begin typing your search above and press return to search.

சிம்புவின் மாநாடு படத்தின் முதல் பாடல் ஜூன் 21 அன்று வெளியீடு!

சிம்புவின் மாநாடு படத்தின் முதல் பாடல் ஜூன் 21 அன்று வெளியீடு!

ParthasarathyBy : Parthasarathy

  |  9 Jun 2021 2:51 PM GMT

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தின் ட்ரைலர் வெளியான உடன் சிம்பு ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர், குறிப்பாக அதில் யுவன்ஷாங்கர் ராஜாவின் பின்னணி இசை பல தரப்பு மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.


சிம்பு மற்றும் யுவான்ஷாங்கர் ராஜா இணைந்து பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ள நிலையில் இந்த படத்திற்கான இசை மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அது மட்டுமின்றி வெங்கட் பிரபு சிம்புவை வைத்து முதல் முறையாக அரசியல் படத்தை இயக்கியுள்ளதால் இந்த படத்தின் இசை குறித்து பலர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் மாநாடு படத்திற்கான முதல் பாடல் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகார பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடன் சிம்பு மற்றும் யுவன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி உடன் கொண்டாடுகின்றனர். இந்த படத்திற்கான இசை உரிமையை யுவான்ஷாங்கர் ராஜாவின் "U1 RECORDS" பெற்றுள்ளது,எனவே இந்த பாடல் யுவான்ஷங்கர் ராஜாவின் இணைய சேனலில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News