நள்ளிரவில் மருத்துவமனை வரை தனியாக காரில் சென்ற கே.வி.ஆனந்த் - அதிகாலை 3 மணிக்கு உயிரோடு இல்லை!
By : Muruganandham
இயக்குனர் கே.வி ஆனந்த் மறைவு தமிழ் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தவருடத்தில் மட்டும் பல திரையுலக பிரபலங்களை இழந்துள்ளோம். 1994-ல் மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகி, முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பெற்றார். பிறகு தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவளராக பணியாற்றி உள்ளார்.
எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனால், அவரது உயிரை யாராலும் காப்பாற்றமுடியவில்லை. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30)அதிகாலை 3 மணிக்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது. பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநராக வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.