ஓ.டி.டி'யில் வெளியாகிறதா 3 தேசிய விருதுகள் வென்ற மரைக்காயர்?

மோகன்லால் நடித்த மரைக்கார் படத்தை ஓ.டி.டி'யிலேயே வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டாராம் தயாரிப்பாளர் தரப்பு.
பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த படம் கேரளாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவரின் சரித்திர கதையாக உருவாகி உள்ளது. மோகன்லால், சுனில் ஷெட்டி, அர்ஜுன் சர்ஜா, பிரபுதேவா, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், அசோக் செல்வன் நடித்த இப்படம் கடந்த வருடம் மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது இந்த படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்பதில் சில நாட்களுக்கு முன்புவரை அதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தீர்மானமாக இருந்தார்.
ஆனால் தற்பொழுது இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடலாமா அல்லது ஓ.டி.டி'யில் வெளியிடலாமா என்று யோசித்து வருகிறேன் என இதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கூறியுள்ளார். படம் ஏற்கனவே 67'வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த மலையாள படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஸ்பெஷல் எபெக்ட் ஆகிய 3 தேசிய விருதுகள் வென்றது குறிப்பிடதக்கது.