பாகுபலி-3: மெகா பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலியின் அடுத்த திட்டம்!
By : Amritha
இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற படம் பாகுபலி. இந்த படத்தில் வரும் கதைகளும் வசனங்களும் பார்ப்போரை நெகிழ வைத்தது. பாகுபலி-1 மற்றும் பாகுபலி-2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், தமன்னா, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து, தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி என 4மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அதிக வசூல் சாதனையை பெற்றது என்பது தெரிந்ததே.
தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தை இயக்கி வரும் எஸ்.எஸ் ராஜமெளலி அடுத்ததாக "பாகுபலி 3" குறித்து ஒரு மெகா திட்டத்தை வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த திரைப்படம் திரையரங்கிற்காக இல்லை என்பதும் OTT-காக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் நெட்பிளிக்ஸில் பாகுபலி-3 வெப்சீரிஸ் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 9-பது எபிசோடுகள் கொண்ட தொடராக இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் இந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.