புனித் ராஜ்குமார் தானம் செய்த கண்களால் 4 பேர் பார்வை பெற்றனர் !

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கண் தியானம் செய்ததால் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.
கன்னட முன்னணி சினிமா நடிகர் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29ல் மாரடைப்பால் காலமானார். கர்நாடகத்தை புரட்டி போட்ட இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஏற்கனவே கண் தானம் செய்திருந்ததால் இறந்த பிறகு அவரின் கண்களை எடுத்து சிகிச்சைக்கு பயன்படுத்தினர். தானமாக வழங்கப்பட்ட அவரின் கண்களை நாராயண நேத்ராலயா மருத்துவமனை தலைவர் புஜங்கஷெட்டி மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.
இது குறித்து புஜங்கஷெட்டி நேற்று கூறியதாவது, "இரண்டு கண்கள், இருவருக்கு தான் பொருத்தப்படும். ஆனால், புனித்தின் கண்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நால்வருக்கு பொருத்தியுள்ளோம். அதாவது ஒவ்வொரு கண்ணையும் இரண்டாக வெட்டினோம். கார்னியா எனப்படும் விழிப்படலம் முன்பகுதி, பின்பகுதியாக தனி தனியாக பிரிக்கப்பட்டது. முன் பகுதி விழிப்படலம் இருவருக்கும்; பின் பகுதி விழிப்படலம் இருவருக்கும் பொருத்தினோம், இதனால் ஒரு பெண், மூன்று ஆண்கள் என நான்கு பேர் பார்வை பெற்றுள்ளனர்" என குறிப்பிட்டார்.