Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்.ஆர்.ஆர் படத்தில் 5 மொழிகளுக்கும் பாடும் 5 பாடகர்கள்!

ஆர்.ஆர்.ஆர் படத்தில் 5 மொழிகளுக்கும் பாடும் 5 பாடகர்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  28 July 2021 2:30 AM GMT

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 5 மொழிகளுக்கான பாடலை பாடப்போகும் பாடகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.


இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கீரவானி இசையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்பாடல்களை 5 மொழிகளிலும் பிரபலமான பாடகர்களைப் பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் கீரவானி.

தமிழ்ப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடுகிறார், தெலுங்குப் பாடலை வேடால ஹேமச்சந்திரா பாடுகிறார், மலையாளப் பாடலை விஜய் யேசுதாஸ் பாடுகிறார், கன்னடத்தில் யாசின் நிசார் பாடுகிறார்.


மேலும் ஹிந்தியில் அமித் திரிவேதி பாடுகிறார். இப்படி 5 பாடகர்கள் 5 மொழிகளில் தனித்தனியாக பாடுவதால் படத்தின் பாடல், மற்றும் வெளியீடு பற்றிய ஆர்வம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. படம் அக்டோபர் 13'ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News