ராதேஷ்யாம் நஷ்டத்திற்காக 50 கோடியை திருப்பி கொடுத்தாரா பிரபாஸ்?

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'ராதேஷ்யாம்' படம் தோல்வியடைந்த நிலையில் தனது சம்பளத்திலிருந்து 50 கோடி ரூபாய் பிரபாஸ் திருப்பிக் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரபாஸ் சமீபத்தில் பான் இந்தியா படமாக 'ராதேஷ்யாம்' படத்தை வெளியிட்டார், 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவான இப்படம் இந்தியாவின் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக போகவில்லை என்பதால் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் படத்தின் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட பிரபாஸ் 'ராதேஷ்யாம்' படத்திற்காக வாங்கிய 100 கோடி சம்பளத்திலிருந்து 50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்து விட்டதாக செய்தி பரவி வருகிறது இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.