Begin typing your search above and press return to search.
ஆறே நாள், 600 கோடிகள் வசூல் - 'ராக்கி பாய்' மேஜிக்
KGF2 Collection - 600 crores

By :
வெளியான ஆறு நாட்களில் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது 'கே.ஜி.எப் 2' திரைப்படம்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீனா தாண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள 'கே.ஜி.எப் 2' திரைப்படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'கே.ஜி.எப்' முதல் பாகத்தின் பெரும் வெற்றியை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இரண்டாம் பாகம் 'கே.ஜி.எப் 2' முதல் பாகத்தை விட அதிக ஈர்ப்புடன் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் 'கே.ஜி.எப் 2' இதுவரை உலகளாவிய மொத்த வசூலாக 625 கோடிகளை குவித்துள்ளது, வெளியாகி 6 நாட்களில் 600 கோடி வசூலைக் கடந்து இருப்பது ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தை வாய்பிளக்க செய்துள்ளது. டாப் 10 இந்திய படங்களில் தற்போது 'கே.ஜி.எப் 2' இடம் பிடித்துள்ளது.
Next Story