Kathir News
Begin typing your search above and press return to search.

'அஜித் 61' என்ன மாதிரியான கதைக்களம்?

அஜித் 61 என்ன மாதிரியான கதைக்களம்?

Mohan RajBy : Mohan Raj

  |  13 April 2022 7:45 AM GMT

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் மற்றுமொரு அதிரடி ஆக்ஷன் சாகச கதையில் நடிக்கவிருக்கிறார்.





சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து போனிகபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மீண்டும் 'வலிமை' கூட்டணி இணைந்துள்ளது. அஜித் நடிக்கும் 60 வது படமாக இப்படம் துவங்கப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.





அங்கு தொடர்ந்து ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறுவதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர், இதன் கதைக்களம் இயக்குனர் வினோத் பாணியில் அதிரடி ஆக்சனாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனவும் தெரிகிறது. படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News