இதுவரை யாரும் செய்யாத கதாபாத்திரம் - விஜய் 65 கதாநாயகி தகவல்!
By : Mohan Raj
இதுவரை ஏற்காத கதாபாத்திரம் நடித்துள்ளதாக விஜய்'யின் புதிய படத்தின் கதாநாயகி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் "தளபதி 65", இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 'மூகமூடி' படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடதக்கது. கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பூஜா ஹெக்டே இதுதவிர, தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக 'ராதே ஷ்யாம்', அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதில் 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' படத்தில் இதுவரை எந்த கதாநாயகிகளும் ஏற்று நடித்திராத, ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவராக இந்தப்படத்தில் நடித்து உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.