Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனோ காரணமாக 'தளபதி 65' வெளியீடு தள்ளிப்போகும் வாய்ப்பு..!

கொரோனோ காரணமாக தளபதி 65 வெளியீடு தள்ளிப்போகும் வாய்ப்பு..!

Mohan RajBy : Mohan Raj

  |  21 May 2021 8:30 AM GMT

கொரோனோ ஊரடங்கு காரணமாக விஜய்'யின் 'தளபதி 65' படம் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.


இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் செட் போட்ப்பட்ட அரங்கில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டே படம் தொடர்பான பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனோ காரணமாக மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெரியவில்லை என்றே தகவல்கள் வருகின்றன.


மேலும் இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால், ரிலீஸ் திட்டத்தை சற்று தள்ளி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்படி தளபதி 65 படத்தை அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டன்று வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News