தளபதி 65: விஜய் காஸ்ட்யூம் டிசைனர் வெளியிட்ட வைரல் வீடியோ!
By : Amritha
தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்கு அளித்த தளபதி விஜய் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அன்று இரவு சென்னையிலிருந்து ஜார்ஜியா கிளம்பினார் என்பது அறிந்ததே.
தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியா சென்றனர் என்பதும், இந்தநிலையில் தற்போது விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் பல்லவி என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியா சென்ற அடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தளபதி-65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கும் என்றும், சில வாரங்களில் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.