Kathir News
Begin typing your search above and press return to search.

'தளபதி 65' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல் - குழப்பத்தில் படக்குழுவினர்!

தளபதி 65 படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல் - குழப்பத்தில் படக்குழுவினர்!

AmrithaBy : Amritha

  |  14 April 2021 1:04 PM GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் 'தளபதி 65' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது என்பதும் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் என்பதும் அறிந்ததே. மேலும் இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன












இந்தநிலையில் ஜார்ஜியாவில் தற்போது குளிரான தட்பவெப்பம் மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என்றும் தினமும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாததால் படக்குழுவினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஜார்ஜியாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டுத்தான் படக்குழுவினர் சென்னை திரும்புவார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.


தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில்,நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News