Kathir News
Begin typing your search above and press return to search.

'தளபதி 66' விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா

தளபதி 66 விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா

Mohan RajBy : Mohan Raj

  |  8 March 2022 8:30 AM GMT

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்தபடியாக இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகி யார் என விஜய் ரசிகர்கள் மத்தியில் சஸ்பென்ஸ் நிலவி வந்த நிலையில் படத்தின் கதாநாயகி யார் என்ற தகவல் கசிந்துள்ளது.




தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இப்படத்தில் இளம் கதாநாயகி 'ராஷ்மிகா மந்தனா' விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 'ராஷ்மிகா' சமீபத்தில் நடித்த 'புஷ்பா' படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது இந்நிலையில் விஜய்யுடன் ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா தமிழில் முதல்முறையாக தோன்ற உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News