Kathir News
Begin typing your search above and press return to search.

'விஜய் 66' எப்போது திரையில் வெளியாகும்?

விஜய் 66 எப்போது திரையில் வெளியாகும்?

Mohan RajBy : Mohan Raj

  |  12 April 2022 6:30 AM GMT

'விஜய் 66' படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் எப்போது திரைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.




'பீஸ்ட்' படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் துவங்கியது தற்பொழுது சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.





'விஜய் 66' படத்தின் பெரும்பகுதி சென்னையில்தான் நடைபெறுமென படக்குழு தெரிவித்துள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் மூன்று மாதங்களுக்குள் முடிக்க இயக்குனர் வம்சி திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளிக்கு 'விஜய் 66' திரையில் ரசிகர்களுக்கு விர்ந்தளிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News