Kathir News
Begin typing your search above and press return to search.

சனாதன தர்ம முறைப்படி 70வது பிறந்தநாளை கொண்டாடிய செந்தில்!

சனாதன தர்ம முறைப்படி 70வது பிறந்தநாளை கொண்டாடிய செந்தில்!

Mohan RajBy : Mohan Raj

  |  30 March 2023 2:16 PM GMT

1984ம் ஆண்டு நடிகர் செந்தில் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் செந்தில் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நேரத்தில் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்பிகா சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் செந்தில்-கலைச் செல்விக்கு பீமரத சாந்தி பூஜை நடத்தியுள்ளனர். தனது குடும்பத்தார் அனைவருடனும் சென்று கோவிலில் சாமி கும்பிட்டார்.

கோவிலுக்கு போவதை வெளியில் சொல்லாத நடிகர்கள் மத்தியில் செந்திலின் இந்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 70 வயதில் பீமரத சாந்தி பூஜை செய்தால் நல்ல ஆயுள் கிடைக்கும் என்கின்றனர். அண்மையில் நடிகர் செந்திலும் இந்த பூஜையை செய்து மனைவியை மீண்டும் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரது மொத்த குடும்பமும் கலந்துகொண்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News