1-கோடி நஷ்ட ஈடு:மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிக்பாஸ் பிரபலம்!
By : Amritha
பிக்பாஸ் தமிழ் சீசன்-1 நிகழ்ச்சி முலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் ரைசா.அந்தவகையில் சமீபத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் அவரது முகம் வீங்கி விட்டதாகவும் அதனால் மருத்துவர் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் பிக்பாஸ் ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பிக்பாஸ் ரைசா வில்சன் ஃபேஸியல் மற்றும் முக சிகிச்சைக்காக மருத்துவர் பைரவி என்பவரிடம் சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அவரது சிகிச்சையால் திடீரென ரைசா வில்சன் முகம் வாங்கியதாகத் தெரிகிறது. இது குறித்து ஏற்கனவே ரைசா அவரது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் ஒரு தகவலை பதிவு செய்திருந்தார்
இந்தநிலையில் மருத்துவர் பைரவி அவர்கள் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது இந்த சிகிச்சையை ஏற்கனவே ரைசா செய்திருப்பதாகவும் ஒருநாள் வீங்கினாலும் பின்னர் சரியாகிவிடும் என்றும் இது ரைசா வில்சனுக்கு தெரியும் என்றும் விளக்கம் அளித்திருந்தார். மேலும் ரைசா தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
எனவே தவறான சிகிச்சையால் முகம் வீங்கியதால் மருத்துவர் பைரவியிடம் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த ஒரு கோடி நஷ்ட ஈடை 15 நாட்களுக்குள் வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.