10 லட்சம் பேர் பார்க்க விருப்பம் தெரிவித்த 'வலிமை' - பாகுபலி சாதனை முறியடிப்பு!
By : Mohan Raj
வலிமை படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர், இது முந்தைய சாதனையான பாகுபலியை முந்தியுள்ளது.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத், அஜித் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். அஜித் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இசை யுவன் சங்கர் ராஜா.
கொரோனோ அலை நாடு முழுவதும் பரவி வருவதால் இந்த நேரத்தில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். ஆனாலும் ரசிகர்கள் விடாமல் தொடர்ந்து படத்தை பற்றி தகவல்களை கேட்டு வருகின்றனர்.
ஆனாலும் வலிமை வேறு வகைகளில் சாதனை படைக்கத் துவங்கியுள்ளது. வெளியாகவிருக்கும் படங்களுக்கு புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் ஆர்வம் தெரிவிக்கலாம். அப்படி வலிமை படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். பாகுபலி சாதனையை வலிமை முறியடித்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் வலிமை இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் 17 லட்சம் எண்ணிக்கையுடன் 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' திரைப்படம் இடம் பெற்றுள்ளது.