10 ஆண்டுகளுக்குள் 'மகாபாரதம்' - இயக்குனர் ராஜமௌலி அளித்த சூப்பர் தகவல்

இந்தியர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பான 'மகாபாரதம்' இதிகாசத்தை படமாக்குவது குறித்து இயக்குனர் ராஜமௌலி சூசகமாக தெரிவித்துள்ளார்.
பாரதத்தின் பழம்பெரும் இதிகாசம் 'மகாபாரதம்', இந்தியாவின் முதுகெலும்மான இந்த படைப்பை செல்லுலாய்டில் பதிக்க யாராவது முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே நெடுங்காலமாக இருந்து வந்நது. இதற்கு இயக்குனர் ராஜமௌலி சரியாக இருப்பார் என்கிற ரீதியில் சமீபகாலமாக கருத்துக்கள் உலா வந்தன, காரணம் அத்தகைய பிரம்மாண்டத்தை அளிக்க தகுதியானவர் என்ற பிம்பம் ராஜமௌலி மீது உண்டு.
இந்நிலையில் 'மகாபாரதம்' படைப்பு பற்றி தன் கருத்தை பதிவு செய்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "இன்னும் பத்து ஆண்டுகளில் மகாபாரதம் பட பணிகளை துவங்க வாய்ப்பிருக்கிறது, இப்போது உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கூட மகாபாரதம் தாக்கம் இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.