"10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்க போகிறேன்" - வலிமை வழக்கு தொடர்பாக ஹெச்.வினோத் அதிரடி

வலிமை படத்தின் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் 'வலிமை', படத்தின் கதை, கதாபாத்திரங்கள் 2016 ஆம் ஆண்டு வெளியான 'மெட்ரோ' படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே கிரியேஷன் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் 'வலிமை' திரைப்படம் மார்ச் 25'ஆம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதால் அதற்கு தடை விதிக்க கோரியும் மனுதாரர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்த இயக்குனர் வினோத் தரப்பு கூறியதாவது, 'செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்றவைகளை வைத்து தான் நான் 'வலிமை' படத்தின் கதையை தயார் செய்தேன். இந்த சம்பவங்களுக்கு எந்த காப்புரிமையும் நான் மீறவில்லை மேலும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தாக்கல் செய்த வழக்கு தாக்கல் செய்த செயலுக்கு எதிராக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன்" என்று வாதிட்டனர். இந்த இரு தரப்பின் மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 12'ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.