மாஸ்டருக்கு 1000 தியேட்டர்.. ஈஸ்வரன் படத்திற்கு 100.. அதிர்ச்சியில் படக்குழு.!
மாஸ்டருக்கு 1000 தியேட்டர்.. ஈஸ்வரன் படத்திற்கு 100.. அதிர்ச்சியில் படக்குழு.!

ஈஸ்வரன் படக்குழுவினருடன் திரையரங்கு உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர், இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தைப் பொங்கலுக்கு வெளியீடுவதற்கு படக்குழு தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோன்று நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சுசீந்தரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்படது. இந்நிலையில், பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்தை தமிழகம் முழுவதும் 1000 ஆயிரத்திற்கும் அதிகான தியேட்டர்களின் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதனால் சிலம்பரசன் படத்திற்கு வெறும் 100 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதால் ஈஸ்வரன் படம் வெளியிடத் தாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் சுமார் 800 தியேட்டர்களிலும் ஈஸ்வரன் 200 தியேட்டர்களிலும் திரையிடப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஒருவேளை ஈஸ்வரன் படத்திற்கு நல்லவரவேற்பு கிடைத்தால், ஒரு வாரத்தில் அதிக திரையரங்கில் வெளியிடுவது குறித்து யோசிக்கலாம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதால் படக்குழு அதிர்ச்சியடைந்ததாகவும், மேலும் பேச்சுவார்த்தை தொடரும் எனவும் கூறப்படுகிறது.