Kathir News
Begin typing your search above and press return to search.

11 கிராம் தங்க காசு படக்குழுவினருக்கு வழங்கி ஆர்.ஆர்.ஆர் வெற்றியை கொண்டாடிய ராம்சரண்

11 கிராம் தங்க காசு படக்குழுவினருக்கு வழங்கி ஆர்.ஆர்.ஆர் வெற்றியை கொண்டாடிய ராம்சரண்

Mohan RajBy : Mohan Raj

  |  4 April 2022 11:23 AM GMT

இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நடிகர் ராம்சரண் 11 கிராம் தங்க காசு பரிசாக அளித்துள்ளார்.




கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த படம் ஆர்.ஆர்.ஆர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கிய இப்படம் சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் இப்படம் அனைத்து தரப்பிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.




இந்நிலையில் படத்தின் நாயகன் ராம்சரண் ஆரம்பத்திலிருந்து கடுமையாக உழைத்த சில முக்கிய டெக்னீஷியன்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ஆகியோரை அழைத்து 11 கிராம் தங்க நாணயம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் அவர்களுக்கு சிற்றுண்டியுடன் விருந்து அளித்து இந்த நாணயத்தை பரிசாக அளித்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News