Kathir News
Begin typing your search above and press return to search.

13 ஆண்டுகள் பயணம் - யோகி பாபு நெகிழ்ச்சி

சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு யோகி பாபு ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

13 ஆண்டுகள் பயணம் - யோகி பாபு நெகிழ்ச்சி

Mohan RajBy : Mohan Raj

  |  28 Nov 2022 2:00 AM GMT

சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு யோகி பாபு ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.




தற்பொழுது சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு, காமெடி படம் மட்டுமல்லாது குணச்சித்திர வேடம், கதாநாயகன் என நடித்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நாயகனாக நடித்து வெளியான 'யோகி' படம் மூலம் அறிமுகமானார் பாபு. இந்த படம் வெளியாகி தற்பொழுது 13 ஆண்டுகள் ஆகிறது அந்த வகையில் யோகி பாபு சினிமாவிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது அதற்காக நன்றி தெரிவித்துள்ளார்.




இது குறித்து யோகி படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிறது என்னை பெரிய திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் மற்றும் சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பெரிய திரைக்கு வருவது முன்பு சின்ன திரையில் 6 ஆண்டுகள் எனக்கு பெரும் துணையாக இருந்த ராம் பாலா மற்றும் அனைவருக்கும் நன்றி. விரைவில் பிரபாஸ் படத்தில் நடிக்க உள்ளேன் சினிமாவில் இவ்வளவு தூரம் கொண்டு வந்த ரசிகர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News