Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியன்-2 படத்தை உடனே ஆரம்பிக்கச் சொல்லும் இயக்குனர் ஷங்கர்.!

இந்தியன்-2 படத்தை உடனே ஆரம்பிக்கச் சொல்லும் இயக்குனர் ஷங்கர்.!

இந்தியன்-2 படத்தை உடனே ஆரம்பிக்கச் சொல்லும்  இயக்குனர் ஷங்கர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2020 1:11 PM GMT

இந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உதவி செய்தனர். நடிகர் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996-ம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


இந்த சூப்பர் ஹிட்டான படத்தை இயக்குனர் ஷங்கர் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் சித்தார்த், காஜல்அகர்வால், ரகுல் பிரீத் சிங்,நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா ஆகியோர் பலர் நடித்து வந்தனர். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சண்டை கலைஞர்கள் மற்றும் அரங்கம் அமைப்பவர் மட்டும் பணியில் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ராட்சத கிரேன்களின் மூலம் மின் விளக்கு பொருத்தப்பட்ட இருந்தது. அப்பொழுது திடீரென கிரேன் அவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர்.

ஆனால் அங்கு உதவி இயக்குனராக இருந்த ஆர்ட் அசிஸ்டென்ட், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து கமலஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கொடுமையான விபத்து என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக 6 மாத காலங்கள் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான நஷ்டத்தை ஈடுகட்ட

பட்ஜெட்டை மேலும் குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்தியதாகவும், ஏற்கனவே 400 கோடியில் இருந்து 220 கோடியாக குறைக்கப்பட்ட பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. தற்போது மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளில் தளர்வு அறிவித்திருக்கும் நிலையிலும் இந்தியன் 2 படத்தின் பணிகளை துவங்க தயாரிப்பு நிறுவனம் முன்வரவில்லை. இதனால் கோபமடைந்த ஷங்கர் படப்பிடிப்பை தொடங்குங்கள் அல்லது என்னை வேறு படத்தின் பணிகளை செய்ய விடுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம் குறைந்த ஆட்களை வைத்து இந்தியன்-2 போன்ற பெரிய பட்ஜெட் படங்களை எடுக்க முடியாது என்று அதனால் தற்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட முடியாது என அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News