Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியன்-2 தாமதமாவதால் அடுத்த படத்திற்கு தயாராகும் இயக்குனர் ஷங்கர்.!

இந்தியன்-2 தாமதமாவதால் அடுத்த படத்திற்கு தயாராகும் இயக்குனர் ஷங்கர்.!

இந்தியன்-2 தாமதமாவதால் அடுத்த படத்திற்கு தயாராகும் இயக்குனர் ஷங்கர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2020 2:55 PM GMT

நடிகர் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996-ம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சூப்பர் ஹிட்டான படத்தை இயக்குனர் ஷங்கர் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் சித்தார்த், காஜல்அகர்வால், ரகுல் பிரீத் சிங்,நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா ஆகியோர் பலர் நடித்து வந்தனர்.இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.





இந்நிலையில் கொரோனா காரணமாக 6 மாத காலங்கள் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான நஷ்டத்தை ஈடுகட்ட பட்ஜெட்டை மேலும் குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்தியதாகவும், ஏற்கனவே 400 கோடியில் இருந்து 220 கோடியாக குறைக்கப்பட்ட பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.ஆனால் இதை தயாரிப்பாளர் தரப்பில் ஒத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

எனவே இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறாராம். இவரின் அடுத்த படத்திற்கான கதை கொரோனா ஊரடங்கு காலத்தில் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியதாக அவர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாக இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பது உறுதியாகிவிட்டதாம்.தமிழில் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்,தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களையும் நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்புகள் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News