Kathir News
Begin typing your search above and press return to search.

20 ஆண்டுகளை திரைப்பயணத்தில் கடந்த அல்லு அர்ஜுன் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

20 ஆண்டுகளை திரைப்பயணத்தில் கடந்த அல்லு அர்ஜுன் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2023 1:32 PM GMT

2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அல்லு அர்ஜுன். அதன்பின்னர் ஆர்யா, பருகு, வேதம், ரேஸ் குர்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் அதிக அளவிலான வசூலை வரி குவித்தது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் திரைத்துறைக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துள்ளதை அவர் சமூக வலைத்தளத்தின் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பது, இன்றுடன் நான் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். உண்மையில் நீங்கள் காட்டிய அன்பினால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.



நான் திரைதுறையில் இருக்கும் அனைவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் யார் என்பதை நீங்கள் காட்டிய அன்பு மற்றும் நம்பிக்கை மீது தெரிந்துக் கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார். அல்லு அர்ஜுனின் இந்த பதிவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News