Kathir News
Begin typing your search above and press return to search.

200 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்த 'வலிமை' - போனி கபூர் அறிவிப்பு

200 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்த வலிமை - போனி கபூர் அறிவிப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  24 March 2022 8:00 AM GMT

வலிமை திரைப்படம் இதுவரை 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.




இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹுமா குரோஷி மற்றும் பலர் நடித்த படம் 'வலிமை', யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் கடந்த மாதம் 24'ஆம் தேதி வெளிவந்தது இன்றுடன் இப்படம் வெளிவந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் நாளை இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கின்றனர் படக்குழுவினர்.




இதுபற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் வெளியிட்டிருந்தார். அவர் அதில் குறிப்பிடும்பழுது, "200 கோடிக்கும் அதிகமான பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை புரிந்த தென்னிந்திய ஆக்சன் அனுபவமான 'வலிமை' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 25'ஆம் தேதி ஜீ தமிழ் வெளியிட இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். 'வலிமை' படத்தின் வசூல் எவ்வளவு என்று நிலவரத்தை படத்தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளது அஜித் ரசிகர்களை பரவசப்படுத்தியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News