200 மீட்டர் உயரத்தில் தேயிலை தோட்டத்தில் பறந்த கார் - ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்

குன்னூர் தேயிலைத் தோட்டத்தில் 200 மீட்டர் உயரத்தில் வானில் பறந்து வந்த காரை பார்த்து அங்கிருந்த தொழிலாளர்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது தூதூர்மட்டம், இந்தப் பகுதியில் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதியில்தான் திரைப்பட படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறும். நேற்று காலை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் 20'க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேளையில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் வானத்திற்கு உயரத்திற்கு வானில் பறந்தபடி தேயிலைத் தோட்ட பகுதியில் விழுந்தது இதை பார்த்ததும் பயந்து அங்குள்ள தொழிலாளர்கள் ஓடினர்.
பின்னர் இதுகுறித்து அங்குள்ள கிராமங்களில் விஷயம் பரவியது, பின்னர் பறந்து வந்தது விபத்து ஏற்பட்ட கார் அல்ல சினிமா படப்பிடிப்பு கார் என தெரியவந்தது. நடிகர் நாகார்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி தான் என விஷயம் அறிந்த பிறகு அங்குள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் கார் பறந்த அந்த இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.