Kathir News
Begin typing your search above and press return to search.

24 மணி நேரத்திற்குள் 100 மில்லியன் பார்வையாளர்கள் - இணையத்தை கலக்கும் 'கே.ஜி.எப் 2' டிரைலர்

24 மணி நேரத்திற்குள் 100 மில்லியன் பார்வையாளர்கள் - இணையத்தை கலக்கும் கே.ஜி.எப் 2 டிரைலர்

Mohan RajBy : Mohan Raj

  |  29 March 2022 8:30 AM GMT

வெளியான 24 மணி நேரத்திற்குள் 100 மில்லியன் பார்வைகளை தாண்டி 'கே.ஜி.எப் 2' டிரைலர் ஹிட் அடித்துள்ளது.




பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய்தத் மற்றும் பலர் நடித்த 'கே.ஜி.எப் 2' படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் யூடியூப்பில் வெளியானது. நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த 'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து இந்த படம் இரண்டாம் பாகமாக வெளியாகிறது. இந்நிலையில் வெளியான நிமிடம் முதலே இணையத்தில் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது 'கே.ஜி.எஃப் 2' ட்ரெய்லர்.




தற்பொழுது வெளியாகி 24 மணி நேரத்துக்குள் 100 மில்லியன் பார்வைகளை தாண்டி ஹிட் அடித்துள்ளது யூடியூப் இணையதளத்தில் 'கே.ஜி.எப் 2' டிரைலர், ஹிந்தியில் 48 மில்லியன், கன்னடத்தில் 18 மில்லியன், தெலுங்கில் 19 மில்லியன், தமிழில் 11 மில்லியன், மலையாளத்தில் 7 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News