Kathir News
Begin typing your search above and press return to search.

30 வருடங்களுக்கு பின் 'விக்ரம்' படத்திற்காக சவாலான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன்!

30 வருடங்களுக்கு பின் விக்ரம் படத்திற்காக  சவாலான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன்!

Mohan RajBy : Mohan Raj

  |  15 July 2021 7:30 AM GMT

"விக்ரம்" படத்தில் 30 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் கண் பார்வையாளராக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படம் 'விக்ரம்'. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தை நடிகர் கமல்ஹானின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த 1981-ம் ஆண்டு வெளியான 'ராஜ பார்வை' படத்தில் கண் பார்வையற்றவராக நடித்திருந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது 30 ஆண்டுகளுக்கு பின் விக்ரம் படத்திற்காக இந்த துணிச்சலான வேடத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News