நடிகர்கள், இயக்குனர்கள் தங்கள் சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டும் - கூறுவது யார் ?
நடிகர்கள், இயக்குனர்கள் தங்கள் சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டும் - கூறுவது யார் ?

இயக்குனர் பாரதிராஜா நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பாரதிராஜா சங்க தலைவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வெளியிட்ட அறிக்கையில் கூறுவது: கொரோனா காரணமாக படங்களுக்காக தயாரிப்பாளர்கள் வாங்கிய பணம் வட்டி முதலுமாக தரவேண்டி உள்ளது. கொரோனாவுக்கு முன் பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் மீதமுள்ள படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில் தயாரிப்பாளர்களுக்கு 50 சதவீதம் நஷ்டம் என்பது தெரிகிறது.
இதனால் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அவர்களது சம்பளத்தில் குறைந்த பட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துதருமாறு வேண்டுகோள் வைக்கிறேன். இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. இவ்வாறு பாரதிராஜா கூறி இருந்தார். மேலும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் இல்லை என்றும் 10 லட்சத்துக்கு மேல் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.