Begin typing your search above and press return to search.
4 மாத சிகிச்சைக்கு பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் !

By :
விபத்தில் சிக்கிய பின் குணமாகி முதன்முறையாக வெளியே பொது நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த். தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யாஷிகா நடக்க முடியாத அளவிற்கு காயம் ஏற்பட்டு படுத்தபடுக்கையானார்.
4 மாத கடுமையான சிகிச்சைகளுக்கு பிறகு உடல் நிலை குணமான நிலையில் யாஷிகா சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட படத்தை வெளியிட்டுள்ளார். கையில் ஸ்டிக் உதவியுடன் தாங்கி தாங்கி அவர் நடந்து வரும் வீடியோக்களும் வைரல் ஆகி வருகின்றன.
Next Story