50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமை அனுமதி - கேள்விக்குறியாகும் 'வலிமை' வெளியீடு!

By : Mohan Raj
வலிமை படம் வெளியீட்டு தேதி அறிவித்த அடுத்தநாளே திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகள் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் 'வலிமை வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கொரோனோ கால ஊரடங்கினால் திரையரங்குகள் திறக்கப்படமால் இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய படங்களின் வெளியீடு பெரும்பாலும் தள்ளிப்போனது. சில படங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்து வந்தன. இந்நிலையில் இரண்டாம் அலை முடிவுக்கு வந்து நிலைமை சகஜமான பிறகு படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று படங்கள் வேலைகள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வெளியீட்டிற்கும் தயாராகின. அதில் 'வலிமை' படம் முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நடைபெற்று தற்பொழுது படம் தயாராகி ஜனவரி 13'ம் தேதி என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான் ஒமைக்கிரான் வைரஸ் பரவல் வேகமெடுக்க துவங்கியது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தொற்று பரவாமல் இருக்க எச்சரிக்கை செய்தது. இதனையடுத்து தமிழக அரசும் நேற்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது, அதற்கு முன்தினம் தான் 'வலிமை' படம் ஜனவரி 13'ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும் பட்ஜெட் செலவில் உருவான 'வலிமை' படம் செலவுக்கு தகுந்த வசூல் செய்யுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு 50 சதவிகித இருக்கைகளுடன் படம் வெளியாகும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகளாக படத்திற்கு செலவு செய்த தொகையை கண்டிப்பாக தயாரிப்பாளர் திரும்ப எடுக்க இயலாது. எனவே 'வலிமை' வெளியீட்டில் மாற்றம் இருக்கும் அல்லது தள்ளிப்போகும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
