Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதானா?

விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதானா?

விஜய் சேதுபதி  800 படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதானா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2020 3:01 PM GMT

விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன. அந்த வகையில் தற்போது படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று பலர் பல கண்டனங்களை கிளப்பி வந்தனர்." ஷேம் ஆன் விஜய் சேதுபதி" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியது.

அதன்படி ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, சேரன், தாமரை உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவை பதிவிட்டு வந்தனர்.

இதைப் பற்றி எதுவும் அறிக்கையை வெளியிடாமல் பேட்டிகளில் கலந்து கொள்ளாமல் விஜய்சேதுபதி மவுனம் காத்தார். மேலும் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

















இதற்கு டுவிட்டர்,இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதனால் இப்படத்தில் இருந்து முழுமையாக விலகி விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News