Kathir News
Begin typing your search above and press return to search.

ஜப்பானில் விருது பெற்ற தளபதி!

சமீபத்தில் ஜப்பானில் ஒசாக தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது.

ஜப்பானில் விருது பெற்ற தளபதி!

KarthigaBy : Karthiga

  |  24 May 2023 3:15 PM GMT

ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழாவில் 2021- ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. மாஸ்டர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்பட்டது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் பண்டிகைக்கு வெளியானது.


இந்த படத்தில் மேலும் விஜய் சேதுபதி மாளவிகா மோகனன்,அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ் , ஆண்ட்ரியா மற்றும் கௌரி கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். மொத்தம் மூன்று விருதுகளை வென்றுள்ளது. பாடலுக்கான சிறந்த நடன வடிவமைப்புக்கான விருதை தினேஷ்குமாரும் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும் வென்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News