Kathir News
Begin typing your search above and press return to search.

உடைந்த பியானோவில் இசையமைத்த இசை அமைப்பாளர்

பீட்சா 3 திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அருண் ராஜ் 200 வருட பழமையான உடைந்த பியானோவை வாங்கி சரி செய்து இசையமைத்திருக்கிறார்.

உடைந்த பியானோவில் இசையமைத்த இசை அமைப்பாளர்
X

KarthigaBy : Karthiga

  |  9 Sept 2023 3:45 PM IST

அஸ்வின் காக்க மானு மற்றும் காளி வெங்கட் நடித்த பீட்சா 3 திரைப்படத்தில் அருண்ராஜ் இசையமைத்திருந்தார். அவர் கூறியதாவது:-


பீட்சா - 3 படத்துக்காக ஒரு விசித்திர இசை பயணத்தில் முற்றிலும் புதிய ஒலியின் தேடலை தொடங்கினேன். இந்த தேடல் என்னை நாட்டின் மிகப் பழமையான மியூசிக் கடைக்கு அழைத்துச் சென்றது . இங்குதான் 200 வருடம் பழமையான உடைந்த பியானோவை பார்த்தேன். அந்த பியானோவை சென்னைக்கு கொண்டு வந்து ரிப்பேர் செய்து பல புதிய உத்திகளை பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்தோம் .


அதன் பலனாக பீட்சா-3 ஒலிகள் தனித்துவம் வாய்ந்த பல இசை கோர்வைகளாக வடிவெடுத்தன. அறியாதவற்றை இசைத்தல் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்த நினைத்தேன். அதனால் பெரிதாய் பாடிய அனுபவம் இல்லாத வெளிநாட்டு பாடகர்களை பாட வைத்தது புது முயற்சியாக அமைந்தது. புதுப்பாடல் பதிவிற்கு வழக்கத்துக்கு மாறான இந்த புதிய பாடகர்களின் சேர்க்கை தனித்துவம் வாய்ந்த இசையை கொண்டு வந்தது . மேலும் ஒரு பின்னணி இசை குழுவை வைத்து வித்தியாசமான பல வகை ஒளி தாக்கங்களையும் உருவாக்கினேன். புதிய படங்களுக்கு இசையமைக்க கதைகள் கேட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE:DINAKARAN



Next Story
கதிர் தொகுப்பு
Trending News