எப்படி எடுத்தீங்க? - இரவின் நிழல் திரைப்படம் குறித்த ஆச்சர்யத்தில் சூப்பர் ஸ்டார்
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக உள்ள இரவின் நிழல் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி வெளியிட்ட வீடியோ இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.

By : Mohan Raj
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக உள்ள இரவின் நிழல் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி வெளியிட்ட வீடியோ இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் புதிய முயற்சியாக ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'இரவின் நிழல்' பல அயல்நாட்டு திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்த திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் பேசியுள்ள ரஜினிகாந்த், 'பார்த்திபன் எப்பொழுதும் வித்தியாசமான முயற்சிகள் செய்யணும்ங்கிறது துடிக்கிற ஒரு கலை ரசிகன், உலகத்தில் யாரும் இதுவரைக்கும் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் எடுத்தது கிடையாது. 29 நிமிஷம் இந்த படத்தை எப்படி எடுத்தாங்கன்னு காட்டினாங்க புல்லரிக்குது இந்த படம் நிச்சயம் ரொம்ப நல்லா போகும்' என பாராட்டியுள்ளார்.
