Kathir News
Begin typing your search above and press return to search.

வில்லன் வேடமா? எனக்கு ரொம்ப பிடிக்குமே!- நடிக்க விரும்பும் ஜெயம் ரவி

வில்லன் வேடத்தில் நடிக்க விரும்புவதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.

வில்லன் வேடமா? எனக்கு ரொம்ப பிடிக்குமே!- நடிக்க விரும்பும் ஜெயம் ரவி

KarthigaBy : Karthiga

  |  27 April 2023 4:15 AM GMT

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் ,திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இந்த படத்தை விளம்பரப்படுத்த நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ஜெயம் ரவி பங்கேற்று பேசும்போது திரைப்படங்களில் நல்லவன் கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்புவதில்லை. காரணம் அதில் ஒரே மாதிரியான நடிப்பை தான் வெளிப்படுத்த முடியும். வில்லன் வேடங்கள் அப்படி அல்ல கெட்டவனாக நடிக்கும் போது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.


பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக எப்படி நடிக்க வேண்டும் என்று மணிரத்தினம் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். இந்த கதாபாத்திரம் நடிக்க நான் யாரையும் காப்பி அடிக்கவில்லை. ஏற்கனவே சிவாஜிகணேசன் ராஜராஜ சோழனாக நடித்திருக்கிறார். அந்த படத்தை பார்க்காமல்தான் நடித்தேன். அதை பார்த்திருந்தால் அவருடைய நடிப்பின் தாக்கம் எனக்குள் வந்து இருக்கும் . எனது நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடாகாது. என்னால் எப்படி முடியுமோ அப்படி நடித்தேன் என்றார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News