செலவு செய்த தொகையை கூட எடுப்பதற்கு தடுமாறும் 'ஆதி புருஷ்'- முதல் வாரமே வசூலில் ஆட்டம் கண்டது!
தேவையற்ற கிராபிக்ஸ் காட்சிகளை தேவைப்படாத இடங்களில் பயன்படுத்தியதால் ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் மக்களை கவராமல் வசூலில் ஆட்டம் கண்டுள்ளது.
By : Karthiga
ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் டிரைலர் வந்ததுமே ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கிராபிக்ஸ் காட்சி சரியில்லை என்று கருத்துக்களை பதிவிட்டனர் இதனால் மேலும் ரூபாய் 100 கோடியை செலவிட்டு கிராபிக்ஸ் காட்சிகளை மெருகேற்றி இருப்பதாக பட குழுவினர் தெரிவித்தனர்.
ராமர் தனது தம்பி லட்சுமணன் மற்றும் மனைவி சீதையுடன் வனவாசம் சென்றதிலிருந்து 'ஆதிபுருஷ்' படம் தொடங்குகிறது. வனத்தில் அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் ராவணன் சீதையை கடத்திச் சிறை வைப்பது சீதையை மீட்பதற்காகக ராமர் வானர படையின் உதவியை நாடுவது, கடலில் பாலம் அமைப்பது பின்னர் இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்பது என்று படம் செல்கிறது .
ராமாயணம் உணர்வுபூர்வமான ஒரு கதையாகும். அதில் நடிப்புக்கும் வசனத்திற்கும் பெரிய இடம் உண்டு. ஆனால் அவை அனைத்தையும் கிராபிக்ஸ் காட்சிகளால் நிரப்பி விடலாம் என்று இந்த படத்தின் இயக்குனர் நினைத்துதான் மிகப்பெரிய தவறாகிவிட்டது. 'ஆதிபுருஷ்' படம் தொடங்கியது முதலில் சமூக வலைதளங்களில் படம் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் வெளியானது தான் படம் சரியாக ரசிகர்களிடம் சென்று சேராததற்கும் பட வசூலில் தொய்வு ஏற்படவும் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த கருத்தை முழுமையாக ஏற்க முடியாது சமூக வலைதளத்தில் பரவும் எதிர்மறை கருத்துக்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயித்து விட முடியாது .வெற்றி தோல்வி என்பது ரசிகர்களின் ரசனையை திருப்திப்படுத்துவது சம்பந்தமானது. பன்னெடுங் காலமாக இந்திய மக்களின் மனதில் ஆழமாக பதிந்து கிடக்கும் பக்தி காவியங்களை திரைப்படமாக எடுக்கும் போது பிரம்மாண்டத்தை விடவும் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமாகவும் கதையும் காட்சிகளும் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
'ஆதி புருஷ்' படம் அனைவருக்கும் சொல்லி இருப்பது என்னவெனில் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான கதை அம்சத்துடன் படம் இருக்க வேண்டும் வெறும் கிராபிக்ஸ் காட்சிகளால் மட்டும் அதனை நிரப்பி விட முடியாது. படத்தின் தயாரிப்பு ரூபாய் 600 கோடி படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க செலவு ரூபாய் 100 கோடி என்று செலவு செய்திருக்கும் நிலையில் அந்த தொகை கூட கிடைக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.