'ஆச்சார்யா' படம் சரியாக போகாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் படத்தை வாங்கியவர்களுக்கு நஷ்ட ஈடு தர ராம்சரண் தரப்பு தயாராகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.ஆர்.ஆர் படம் முடிந்த கையுடன் தனது தந்தை சிரஞ்சீவியுடன் 'ஆச்சாரியா' என்ற படத்தில் நடித்தார் ராம்சரண். சமீபத்தில் வெளியான 'ஆச்சார்யா' திரைப்படம் எதிர்பார்த்த அளவு சரியாக போகாததால் படத்தை வாங்கிய திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் என அனைவரும் பொருளாதார ரீதியில் சிரமப்படும் அளவிற்கு இருந்தது படத்தின் முடிவுகள்.
இந்த நிலையில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் ஒருவர் சிரஞ்சீவிக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என வெளிப்படையாகவே கடிதம் எழுதினார். எனவே படத்தின் தயாரிப்பாளர் ராம்சரண் நஷ்ட ஈடு தருவதற்கு ஏற்பாடு செய்து வருகிறாராம். இதுகுறித்து யார் யாருக்கு என்ன தொகை தரவேண்டும் என்பது ராம்சரண் தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.