பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி.!
இந்தியாவில் இரண்டு வகையான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக போடப்பட்டு வருகிறது.
By : Thangavelu
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுக்கிறது. கடந்த ஒரு சில வாரங்களாக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது
இதனால் கடந்த ஆண்டு இதே நிலைதான் நீடித்தது. இதனை கட்டுப்படுத்துவதற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடைய ஒரு வருடத்திற்கு பின்னர் கொரோனா தடுப்பு மருந்து வெற்றிகரமாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்தியாவில் இரண்டு வகையான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக போடப்பட்டு வருகிறது. இதனால் தொற்று பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது: அமீர்கான் தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.