எளிமையாக ஆட்டோவில் சென்ற நடிகர் அஜித்.!
நடிகர் அஜித் மிக எளிமையான முறையில் ஆட்டோவில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
By : Thangavelu
நடிகர் அஜித் மிக எளிமையான முறையில் ஆட்டோவில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
நடிகர் அஜித்தின் வலிமை படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் அப்டேட் வேண்டும் என்றும் ரசிகர்கள் கிட்டத்தட்ட ஓராண்டாக கேட்டு வருகின்றர். ஆனால் இன்னும் எந்த ஒரு தகவலும் கிடைத்த பாடில்லை. இதனிடையே செல்லும் இடங்களில் படத்தின் அப்டேட் கேட்டிருந்தால், அஜித் அதிரடியான ஒரு அறிக்கை விட்டார். இதனால் அனைவரும் அமைதியானார்கள்.
இதற்கு பிறகு அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வமாக ஈடுபட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், சமீபத்தில் 'வலிமை' படத் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது அஜித் மிகவும் எளிமையாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.