துப்பாக்கி சுடுதல்.. அடுத்த ரவுண்டுக்கு தேர்வான நடிகர் அஜித்குமார்.!
நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் இருந்து எப்போதும் மாறுப்பட்டவராகவே இருப்பார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்டவாராக இருப்பவர்.

நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் இருந்து எப்போதும் மாறுப்பட்டவராகவே இருப்பார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்டவாராக இருப்பவர்.
கார் பந்தயம், பைக் ரேஸ்- உள்ளிட்டவைகள் மீதும் அதிகமான கவனம் செலுத்தி வருபவர். சமீபத்தில் அண்ணா பல்கலை மாணவர்களுடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் வெற்றியுள் கண்டார்.
அவர் கண்டுப்பிடித்த ட்ரோன் அரசு விழாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நடிகர் அஜித்துக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் அஜித் மற்றொரு விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார். அதாவது சென்னை ரைபிள் கிளப் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் அது தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிந்ததை அனைவரும் பார்த்தோம். அதே சமத்தில் அஜித்தின் வலிமை படம் விரைவில் திரைக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால், துப்பாக்கி பயிற்சியில் தீவிரம் காட்டி வந்த அஜித்குமார், 40 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகி உள்ளார்.
நடிகர் அஜித்துக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.