Kathir News
Begin typing your search above and press return to search.

'பரத்' படத்தில் இணைந்த வாணி போஜன்.!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கானுடன் ‘ராதே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் ரம்ஜான் அன்று வெளியாகிறது.

பரத் படத்தில் இணைந்த வாணி போஜன்.!

ThangaveluBy : Thangavelu

  |  12 April 2021 11:11 AM GMT

நடிகர் பரத், வாணி போஜன் இணையும் புதிய படத்தின் அறிவுப்பு வெளியாகியுள்ளது. நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான காளிதாஸ் படம் மிகப்பெரிய வசூலை எடுத்தது. அனைத்து தரப்பு மக்களும் படத்தை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பரத்திற்கு சின்ன தளபதி என்ற பட்டத்தை அவரது ரசிகர்கள் வழங்கியுள்ளனர். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதற்கிடையில், பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கானுடன் 'ராதே' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் ரம்ஜான் அன்று வெளியாகிறது.





இந்நிலையில், சசிக்குமாரின் 'பகைவனுக்கு அருள்வாய்', விக்ரம் 60 உள்ளிட்ட படங்களில் வாணி போஜன் நடித்துள்ளார். தற்போது பரத் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு பெயரிடவில்லை. டில்லி பாபு தயாரிக்க உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News