நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலே உருவாகியுள்ளது. தமிழகத்தில் சாதாரண மக்கள் மட்டுமின்றி சினிமா, அரசியல் பிரபலங்களும் தினமும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமா நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சென்னையில உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். டேனியல் பாலாஜி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.