நடிகர் ‘தனுஷ் 43’ படம்.. இன்று முதல் தொடங்கிய படப்பிடிப்பு.!
நடிகர் ‘தனுஷ் 43’ படம்.. இன்று முதல் தொடங்கிய படப்பிடிப்பு.!

By : Kathir Webdesk
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘தனுஷ் 43’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், கார்த்திக் நரேனின் பெயரிடப்பட்டாத ‘தனுஷ் 43’ படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது. கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், ‘தனுஷ் 43’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இது பற்றி ஜிவி பிரகாஷ் பாடல் காட்சி இன்று படமாக்கப்படவுள்ளதாகவும், படத்தின் ஓபனிங் பாடலை விவேக் எழுதியுள்ளதாகவும் தனுஷ் பாடியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
