Begin typing your search above and press return to search.
திரையரங்கில் கட்டுப்பாடுகள்: இன்று வெளியானது தனுஷின் 'கர்ணன்'
கர்ணன் திரைபடம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

By :
தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி அனைத்து திரையரங்கிலும் வெளியானது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'கர்ணன்' டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை பரவத் தொடங்கியுள்ளதால், நாளை முதல் (ஏப்ரல் 10) 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையங்குகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக கர்ணன் திரைபடம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
Next Story