Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் தனுஷின் புதிய படம்: இயக்குனர் இவரா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் தனுஷின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் புதிய படம்: இயக்குனர் இவரா? -  எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

KarthigaBy : Karthiga

  |  18 May 2023 2:15 AM GMT

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் மாறன், திருச்சிற்றம்பலம், நானே ஒருவன் ஆகிய படங்கள் வந்தன. இதில் திருச்சிற்றம்பலம் பெரிய வெற்றி பெற்றது . தி கிரே மேன் ஹாலிவுட் படமும் வெளியாகி உலக அளவில் தனுஷை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாரான வாத்தி படத்தில் தனுஷ் நடித்து இருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது .


தற்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் . இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் டைரக்டர் செய்கிறார். கேப்டன் மில்லர் படத்துக்கு பிறகு தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை நெல்சன் டைரக்ட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனுஷும் நெல்சனம் சந்தித்து இது குறித்து பேசியதாக கூறப்படுகிறது .


நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜயின் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை டைரக்டர் செய்து வருகிறார். ஜெயிலர் படம் முடிந்ததும் தனுஷ் படப்பிடிப்பை தொடங்குவார் என்று தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News