படப்பிடிப்பில் விபத்து.. மலையாள நடிகர் பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி.!
மலையாளத்தில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் நடிகை நஸ்ரியாவின் கண்வரும் ஆவார். பஹத் பாசில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் மற்றும் விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

மலையாளத்தில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பஹத் பாசில். இவர் நடிகை நஸ்ரியாவின் கண்வரும் ஆவார். பஹத் பாசில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் மற்றும் விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இணைந்து நடித்துள்ளார். அதே போன்று மலையாள படத்தில் பிஸியாக வலம் வருபவர் என்றும் சொல்லலாம்.
இந்நிலையில், மலையன்குஞ்சு எனும் மலையாள படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பஹத் பாசில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார். ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, பஹத் பாசில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படக்குழு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
மேலும், சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.